யாழ் ஆயருடன் மைத்திரி பேச்சு
முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன நேற்று யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டீன் பெர்னாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையை (Justin Bernard Gnanapragasam)சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள முன்னாள் அரச தலைவரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார்.
அந்த வகையில் நேற்று பிற்பகல் யாழ் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டீன் பெர்னாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த சந்திப்பில் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பற்றிக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் மின் உற்பத்தி கருத்திட்ட இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க, நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





