ராஜபக்சாக்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்க தயாராகும் மைத்திரி?
srilanka freedom party
maithiripala sirisena
rajapakshas
By Sumithiran
மைத்திரி தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க தயாராகி வருவதாக கொழும்பு அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி எதிர்வரும் தேர்தலில் அரசாங்கத்தில் இருந்து பிரிந்து புதிய அரசியல் கூட்டணியொன்றை உருவாக்கி களமிறங்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்தக் கட்சியின் மத்திய செயற்குழு அண்மையில் கூடிய போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று தெரியவருகிறது.
மேலும் மக்கள் முன்னணி அல்லது ஐக்கிய முன்னணி என்ற பெயரில் கூட்டணி ஆரம்பிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி