மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குங்கள் - மைத்திரிக்கு அழைப்பு
srilanka
political
parliament
maithripala sirisena
srilanka freedom party
By S P Thas
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் 2024 இல் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூராட்சி பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜூலை 29 அன்று காலி மாவட்டத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டத்தில் இந்த கோரிக்கை எழுத்து பூர்வமாக முன்னாள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதாக கட்சியின் மத்திய குழு உறுப்பினர் திசர குணசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த கோரிக்கைக்கு மைத்திரிபால சிறிசேன உடனடியாக பதில் எதையும் வழங்கவில்லை என்றும் திசர குணசிங்க கூறினார்.
இதேவேளை, தாம் அடுத்த தேர்தலிலும் போட்டியிட ஆர்வமாக உள்ளதாக தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி