களுவாஞ்சிக்குடியில் பாரிய விபத்து : தெய்வாதீனமாக உயிர் தப்பிய சாரதி
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் தொலைத் தொடர்பு கம்பத்துடன் மோதி வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த வீதியின் களுவாஞ்சிக்குடி அற்புதப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் இன்று (04.01.2026) குறித்த விபத்து சம்பவித்ததாக களுவாஞ்சிகுடி காவல்துறையினர் தெரிவித்தனர்.
கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த வட்டா ரக வாகனமே சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காவல்துறையினர் விசாரணை
இந்த விபத்தில் சிறுகாயங்களுக்குள்ளான சாரதி தெய்வாதீனமாக உயிர் பிழைத்துள்ள நிலையில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் விபத்துக்குள்ளான வாகனத்தின் முன்பகுதி பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்நிலையில் ஸ்த்தலத்திற்கு விரைந்த களுவாஞ்சிக்குடி போக்குவரத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |