ரணிலின் பட்ஜட் : மக்கள் பெரும் மகிழ்ச்சியாம் : மேளம் அடித்தும் கொண்டாட்டமாம்
அதிபர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த வரவு செலவுத்திட்டம் பெரும்பான்மை மக்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
சிவில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களின் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
என்ன செய்தார் பீரிஸ்
“அதிபர் நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்ததை பார்த்தும், செவிமடுத்த மக்கள் 2024 ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் என்று கூறினார்கள்.
இன்னும் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வரும் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் அன்றிலிருந்து இன்று வரை மக்களின் அபிவிருத்திக்கு என்ன சலுகைகளை வழங்கினார்?
இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் போது அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணத் தொகையை கேள்வியுற்ற சில பகுதிகளில் உள்ள மக்கள் மேளம் அடித்து கொண்டாடியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
பலனளிக்காத சஜித்தின் முயற்சி
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து எதுவும் கூற முடியாத நிலையில், கிரிக்கெட் பிரச்சினையில் இருந்து விடுபட அவர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
2024ஆம் ஆண்டு அதிபர் தேர்தலும், 2025ஆம் ஆண்டு பொதுத் தேர்தலும் நடத்தப்படும் எனத் தெரிவித்த அதிபர் ரணில் விக்ரமசிங்க, மாகாண சபைத் தேர்தலும் தனது ஒப்புதலுடன் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
அரசு ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் மானியம் ஏப்ரல் 2024 முதல் வழங்கப்படும். ஓய்வூதியம் பெறுவோர், சிறுநீரக நோயாளர்கள், மாற்றுத்திறனாளி குழந்தைகள், இளைஞர்கள், பெருந்தோட்ட மக்கள் மற்றும் ஏனைய மக்களின் வீட்டுப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |