மலேசியாவில் பறிபோன மலையக இளைஞனின் உயிர்: தாய்மண்ணில் நல்லடக்கம்
மலேசியாவில் (Malaysia) உள்ள உணவகமொன்றில் பணியாற்றிய நிலையில் உயிரிழந்த இலங்கையை சேர்ந்த இளைஞனின் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
மலேசியாவிலிருந்து இலங்கைக்கு சடலம் கொண்டுவரப்பட்டதையடுத்து இன்று (12) இறுதி சடங்குகள் இடம்பெற்றுள்ளன
மஸ்கெலியா (Maskeliya) மொடிங்ஹேம் தோட்டத்தைச் சேர்ந்த ராஜகுமார் டேவிட்சன் என்ற 24 வயது திருமணமாகாத இளைஞனின் சடலமே இவ்வாறு அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
தனியார் வைத்தியசாலை
மலேசியா கோலாலம்பூரில் (Kuala Lumpur) உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த மாதம் 24 ஆம் திகதி கொதிகலன் குறித்த இளைஞன் மீது விழுந்ததில் படுகாயமடைந்து கோலாலம்பூரில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இருப்பினும், கடந்த ஐந்தாம் திகதி காலை சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டிருந்த அந்நாட்டு காவல்துறையினர் இளைஞனின் குடும்பத்தினருக்கு அறிவித்திருந்தனர்.
இளைஞனின் சடலம்
இதற்கமைய, இளைஞனின் சடலம் இலங்கையின் மஸ்கெலியா மோட்டிங்ஹாம் பிரிவில் உள்ள பிரன்சுவிக் தேயிலைத் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு இன்று (12) Brunswick Tea Estate, Mottingham Section பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் உயிரிழந்த இளைஞன் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் மலேசியாவிற்கு வேலைக்காக சென்றிருந்த நிலையிலேயே இந்த அனர்த்தத்திற்கு முகம்கொடுத்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |