புதிய பாப்பரசரை சந்தித்தார் கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித்
கொழும்பு பேராயர்,மல்கம் கர்தினால் ரஞ்சித், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாப்பரசர் லியோ XIV ஐ சந்தித்துள்ளார்.
மல்கம் கர்தினால் ரஞ்சித் மற்றும் பாப்பரசர் ராபர்ட் பிரீவோஸ்ட் ஆகியோர் ஒரு சுமுகமான உரையாடலில் ஈடுபட்டனர், மேலும் இந்த நிகழ்வின் புகைப்படங்கள் கொழும்பு மறைமாவட்டத்தின் சமூக ஊடக கணக்குகளில் வெளியிடப்பட்டன.
புதிய பாப்பரசர் தேர்வில் பங்கேற்ற கர்தினால்
பாப்பரசர் பிரான்சிஸ் மறைவைத் தொடர்ந்து புதிய பாப்பரசரை தேர்ந்தெடுப்பதில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் பங்கேற்றார்.
பெருவின் பேராயராகவும் பணி
அங்கு, இரண்டு நாள் வாக்கெடுப்புக்குப் பிறகு, அமெரிக்கரான ராபர்ட் பிரீவோஸ்ட் புதிய பாப்பரசராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
69 வயதான ராபர்ட் பிரீவோஸ்ட் 267வது பாப்பரசர் ஆனார், மேலும் அவர் லியோ XIV என்று அழைக்கப்படுகிறார். பல ஆண்டுகள் மிஷனரியாகப் பணியாற்றிய பாதிரியார் ராபர்ட் ப்ரோவோஸ்ட், பெருவின் பேராயராகவும் பணியாற்றினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
