இந்திய படையை வெளியேற்றுவோம் : மாலைதீவு புதிய அதிபரின் அறிவிப்பால் பரபரப்பு
India
Maldives
Indian Army
By Jaso
மாலைதீவில் இருந்து இந்திய படையை வெளியேற்றுவோம் என்று மாலைதீவு அதிபராக பொறுப்பேற்க உள்ள முகமது மூயிஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்திய படைக்கு பதிலாக சீனாவையோ அல்லது வேறு எந்த நாட்டின் படையையோ மாலைதீவுக்குள் அனுமதிக்கப் போவதில்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.
சீனாவுக்கு சார்பானவர்
மாலைதீவில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் சீனாவுக்கு சார்பானவர் என தெரிவிக்கப்படும் முகமது மூயிஸ் என்பவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்திய படையை வெளியேற்றுவதால் பரபரப்பு
இவர் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவராக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் அவர் சீனாவின் ஆதரவாளராக இருந்தாலும் சீன படையையும் தன்னுடைய நாட்டிற்குள் அனுமதிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

அவர் மாலைதீவில் உள்ள இந்திய படையை வெளியேற்றுவோம் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்