சாதாரண தர பரீட்சையில் நடந்த மற்றுமொரு முறைகேடு
முடிவடைந்த சாதாரண தர பரீட்சையில் மேலும் பல முறைகேடுகள் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று (16) முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, மினுவாங்கொடையில் உள்ள பாடசாலை ஒன்றில் பரீட்சைக்குத் தோற்றிய 14 மாணவர்களுக்கு புவியியல் வினாத்தாளின் உரிய முறையில் பகுதிகள் வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்தோடு, இரண்டு சிறப்புத் தேவையுடைய மாணவர்களையும் மேற்பார்வையாளர்கள் தடுத்ததாகவும் முறைப்பாட்டாளர்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர்.
குற்றச்சாட்டு
நேற்று (15) முடிவடைந்த 2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சையின் சில வினாத்தாள்களில் பிழைகள் காணப்படுவதாகவும், பல பரீட்சை மண்டபங்களில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
இவ்வாறான பின்னணியில் மினுவாங்கொடை கல்வி வலயத்திலுள்ள பாடசாலையொன்றில் தமிழ் மொழி மூலத்தில் பரீட்சைக்குத் தோற்றிய 14 மாணவர்களுக்கு புவியியல் முதலாம் தாள் மற்றும் வரைபடப் பகுதி வழங்கப்படவில்லை என மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |