ஜனாதிபதி அலுவலகம் உட்பட முக்கிய அரச தளங்களில் சைபர் தாக்குதல்! போலி செய்தி வெளியிட்ட நபர் கைது
arrest
sri lanka
people
By Shalini
ஜனாதிபதி அலுவலகத்தின் இணையத்தளம் உட்பட சில அரச இணையத்தளங்களில் பாரிய சைபர் தாக்குதல் இடம்பெற்றதாகக் கூறி பொய்யான தகவல்களை பரப்பிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்று (07) மாலை குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்
சமூக வலைத்தளங்களில் சைபர் தாக்குதல் இடம்பெற்றதாக கூறி பகிரப்பட்ட பொய்யான தகவல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்..
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் மேற்கொண்டு வருகின்றது.
அத்துடன், குறித்த சந்தேக நபர் இன்று (08) கொழும்பு பிரதான நீதவான் முன் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்