யாழில் நீதிமன்றத்திற்குள் யுவதியிடம் நபரொருவரின் அநாகரீக செயல்
யாழ் (Jaffna) மல்லாகம் நீதிமன்றத்திற்குள் யுவதி ஒருவரிடம் தவறான முறையில் நடந்து கொண்ட நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (22) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “மல்லாகம் நீதிமன்றத்தில் கடமை புரியும் 48 வயதுடைய திருமணமாகாத குறித்த நபர், நீதிமன்றத்தில் வேலை செய்யும் 28 யுவதியுடன் தொடர்ச்சியாக சேட்டையில் ஈடுபட்டுள்ளார்.
இதனை பொறுத்துக் கொள்ள முடியாத குறித்த யுவதி இது குறித்து சுன்னாகம் காவல்நிலையத்தில் நிலையத்தில் நேற்று முன் தினம் (21) முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
காவல்துறையினர் விசாரணை
இந்தநிலையில், சந்தேகநபரை நேற்று (22) விசாரணைகளுக்கு அழைத்த சுன்னாகம் காவல்துறையினர் விசாரணைகளின் பின்னர் அவரை கைது செய்துள்ளனர்.
இதையடுத்து, குற்றம் நிகழ்ந்த இடம் தெல்லிப்பழை காவல் பிரிவுக்குள் உள்ளடங்குவதால் சந்தேகநபர் தெல்லிப்பழை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதன்பின், சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 17 மணி நேரம் முன்
