புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தை சேதப்படுத்திய நபருக்கு விளக்கமறியல்
புதுப்பிக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் விளக்கமறியவைக்கப்பட்டுள்ளார்.
குறித்த தொடருந்து நிலையத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக, அந்த பேருந்து நிலையத்தின் நலன்புரிப் பிரிவினரால் புறக்கோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, 33 வயதுடைய சந்தேகநபர் நபர் ஒருவர் நேற்றைய தினம் (11) களனி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
விளக்கமறியலில் வைக்க உத்தரவு
இந்நிலையில், சந்தேகநபர் கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் ஏப்ரல் 17 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

புதிதாகப் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தைப் (CBS) பாதுகாக்குமாறு இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |