அரிய வகை வலம்புரி சங்கு ஒன்றுடன் சிக்கிய நபர்
களுத்துறையில் வலம்புரிச் சங்கு ஒன்றை விற்பனை செய்ய முயன்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, நேற்று (08.04.2026) இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவர் குருநாகல் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சோதனை நடவடிக்கை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், களுத்துறை பேருந்து டிப்போவிற்கு அருகில் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போதே வலம்புரிச் சங்கு ஒன்றை சுமார் 35 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்யத் தயாராக இருந்த நிலையில், குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக களுத்துறை தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குற்றத்தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |