தங்கத்தை விட அதிக விலை கொண்ட திமிங்கில வாந்தியை விற்க முற்பட்டவர் கைது
தங்கத்தை விட அதிக விலை கொண்ட திமிங்கிலங்களில் இருந்து பெறப்பட்ட 5 கிலோ அம்பர்கிரிஸை (திமிங்கில வாந்தி) 1 பில்லியன் ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வலானா காவல்துறை ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது சந்தேக நபர் அஹுங்கல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
திமிங்கில வாந்தி என்றால் என்ன
திமிங்கில வாந்தி அல்லது அம்பர்கிரிஸ் (Ambergris), திமிங்கிலம் செரிமான உறுப்பிலிருந்து வாய் வழியாக வெளியேற்றும் ஒரு வகை திடக்கழிவுப் பொருள் ஆகும். இது வெள்ளை, சாம்பல் மற்றும் கறுப்பு நிறங்கள் கலந்து இருக்கும்.
திமிங்கிலமானது பீலிக் கணவாய் போன்ற உயிரினங்களை வேட்டையாடி உண்பது வழக்கம். அந்த பீலிக் கணவாயின் ஓட்டை திமிங்கிலங்களின் செரிமான அமைப்பால் செரிக்க வைக்க முடியாது.
எதற்கு பயன்படும்
அதனால் இந்த ஓடுகள் திமிங்கிலத்தின் குடலில் சிக்கிக்கொள்ளும். இந்த ஓட்டினால் திமிங்கிலத்தின் உள் உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க இந்த ஒட்டை சுற்றிய செரிமான அமைப்பிலிருந்து ஒரு சிறப்பு வகை திரவம் உற்பத்தியாகிறது.
இதனை அம்பர்கிரிஸ் என்பர். இது நறுமணப் பொருட்கள் மற்றும் பாலியல் மருந்துகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.
இந்த அம்பர் கிரிசை சிலசமயம் திமிங்கிலங்கள், வாந்தியெடுப்பதன் மூலம், வெளியேற்றுகிறது. சில திமிங்கிலங்கள், மலப்புழை வழியாகவும் இதை வெளியேற்றுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |