விடுதலைப்புலிகளின் தகவல் தொடர்பு சாதனத்துடன் காலியில் ஒருவர் கைது
                                    
                    Sri Lanka Police
                
                                                
                    Galle
                
                        
        
            
                
                By Sumithiran
            
            
                
                
            
        
    புலிகளின் தகவல் தொடர்பு சாதனத்துடன் கைது
காலி நகரில் உள்ள தையல்கடைக்காரர் ஒருவரிடமிருந்து இரண்டு புகை குண்டுகள், 10 விமான எதிர்ப்பு தோட்டா உறைகள் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பு பயன்படுத்திய தகவல் தொடர்பு சாதனம் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக காலி காவல்துறையினர் தெரிவித்தனர்.
தலபிட்டிய, காலி, தக்கியா வீதியில் வசிக்கும் 63 வயதுடைய தையல்கடைக்காரர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆயுதங்கள் மறைத்து வைப்பு
சந்தேக நபர் காலி நகரில் தையல் நிலையம் ஒன்றை நடத்தி வருவதாகவும், அங்கு ஆயுதங்களை மறைத்து வைத்திருப்பதாகவும் கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சஹ்ரானின் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பிணையில் விடுவிடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
 
    
                                
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        