யாழில் சவற்காரத்திற்குள் வைத்து நூதனமாக ஹெரோயின் கடத்தியவர் கைது!
யாழில் வாசனை சவற்காரத்திற்குள் வைத்து நூதனமான முறையில் போதைப் பொருள் கடத்திய ஒருவர் யாழ்ப்பாணம் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண நகர்புறப் பகுதியில் போதைப்பொருளை விற்பனைக்காக கொண்டு சென்றவேளை உடுவில் பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே நேற்று (9) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் யாழ்ப்பாணம் காவல் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரத்ன தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளில் போதைப்பொருள் வியாபாரம் இரகசியமான முறையில் இடம்பெற்று வருவதாக யாழ் காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை
அதன் அடிப்படையில் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரும் காவல்துறை புலனாய்வு பிரிவினரும் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டார்.
காவல்துறையினரின் சோதனையின் பொது வெளியிடம் ஒன்றிலிருந்து பொதிகள் அனுப்பும் சேவை மூலம் வரவழைக்கப்பட்ட வாசனை சவற்காரத்தில் மாறைத்து வைக்கப்பட்டிருந்த 7 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.

கைதுசெய்யப்பட்ட நபர் ஏற்கனவே 2023 இல் ஒரு தடவையும் அதன் பின்னர் கடந்த மாதமும் சிறியளவிலான இதே குற்றங்களுக்காக கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்ட ஒருவராவார்.
கைதான நபரரை மேலதிக விசாரணையின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் யாழ் காவல்துறை பிரிவில் இவ்வாரம் 23 பேர் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்” என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |