கட்டுநாயக்கவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட வர்த்தகர்!
Sri Lanka Airport
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dhilak
சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டு பெட்டிகளை நாட்டிற்குள் கொண்டு வந்த பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன்போது, கம்பஹா பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய வர்த்தகர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துபாயில் இருந்து வந்த சந்தேக நபர், 15,000 சிகரெட்டுகள் அடங்கிய 75 சிகரெட் அட்டைப்பெட்டிகளை மறைத்து வைத்திருந்தபோது விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட் தொகையின் பெறுமதி சுமார் இரண்டு லட்சத்தி ஐம்பதாயிரம் ரூபாய் என்று சுங்க அதிகாரிகள் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்