3 மில்லியன் மதிக்கத்தக்க அபின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது
மட்டக்களப்பு மாவட்டத்தில் அபின் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை காவல் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவப் புலனாய்வு துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து லசந்த பண்டாரவின் வழிகாட்டலில் குற்ற புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி ஈ.ஏ.டபள்யூ.எஸ்.எதிரிசிங்க தலைமையிலான காவல்துறை குழுவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே முப்பது லட்சம் ரூபா மதிக்கத்தக்க அபின் போதைப் பொருளுடன் சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.
வாழைச்சேனை அல் அக்ஷா வீதியில் சந்தேக நபரின் சகோதரியின் வீட்டினை சுற்றி வளைத்த போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 500 கிராம் அபின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஓட்டமாவடி புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்த் 39 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன் தொடர்புடைய வியாபாரிகள் வேறு யாராவது இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வாழைச்சேனை காவல்துறை பிரிவில் போதைப் பொருள் பாவனையை இல்லாமல் செய்வதற்கு காவல்துறையினருடன் இணைந்து வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வு அதிகாரிகளும் இணைந்து செயற்பட்டவருவது குறிப்பிடத்தக்கது என்று காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

