மட்டக்களப்பில் காரில் கடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான போதை மாத்திரைகள்: சந்தேக நபர் கைது
ஓட்டமாவடியில் இருந்து மட்டக்களப்புக்கு (Batticaloa) கார் ஒன்றில் போதை மாத்திரைகளை கடத்திச் சென்ற நபரொருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து, குறித்த சந்தேக நபரிடம் இருந்து 1440 போதை மாத்திரைகளையும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் கைப்பற்றியுள்ளதாக மட்டக்களப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு கடற்படை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து, விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படை புலனாய்வு பிரிவினர் இணைந்து மட்டக்களப்பு தொடருந்து குறுக்கு வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலை
இந்நிலையில், குறித்த வீதியில் பயணித்த இந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து, கைப்பற்றப்பட்ட காரை தம்மிடம் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளதாகவும் கைதான நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |