வெளிநாட்டு கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Crime
By Sumithiran
மினுவாங்கொடை, பீல்லவத்தையைச் சேர்ந்த 39 வயதுடைய நபர், வெளிநாட்டுத் தயாரிப்பான கைத்துப்பாக்கி, மற்றும் 13 தோட்டாக்களை வைத்திருந்ததை அடுத்து, மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவு காவல்துறையினரால் இன்று (நவம்பர் 1) கைது செய்யப்பட்டதாக காவ்துறையினர் தெரிவித்தனர்.
கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, காவல்துறையினர் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினர்.
நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ள சந்தேக நபர்
சந்தேக நபர் நாளை (நவம்பர் 2) மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளார், அங்கு அதிகாரிகள் 48 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவைப் பெறுவார்கள்.

மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவு மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்