கொழும்பில் மின்கம்பத்தில் ஏறிய நபர்: இறங்க வைக்க சிரமப்பட்ட காவல்துறையினர்
கொழும்பு (Colombo) பொரளையின் பிரதான வீதியொன்றில் மின்கம்பத்தில் ஏறிய நபரால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (13) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “குறித்த நபர் மின்கம்பத்தில் ஏறி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் எதற்காக எதிரப்பு தெரிவித்தார் என்பது தொடர்பில் அவர் காரணம் வெளிப்படுத்தவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
கடும்பிரயத்தனம்
குறித்த நபர் தனக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் மின்கம்பத்தில் ஏறி நின்றிருந்த காணொளிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது.
பிரதான வீதியால் சென்ற வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் திரண்டு குறித்த நபரை வேடிக்கை பார்க்க முற்பட்டதால் வீதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், குறித்த நபரை மின்கம்பத்தில் இருந்து கீழே இறக்குவதற்காக கடும்பிரயத்தனம் மேற்கொண்ட காவல்துறையினர் கடைசியில் மின் தூக்கியொன்றை வரவழைத்து அவரை இறக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் திருவிழா
