தொடருந்தில் பாய்ந்து இளைஞன் தற்கொலை
Trincomalee
Sri Lanka Police Investigation
Death
By Pakirathan
இளைஞர் ஒருவர் ஓடும் தொடருந்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் திருகோணமலை மாவட்டத்தில், கந்தளாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நேற்றையதினம் இரவு திருகோணமலையிருந்து கொழும்புக்குச் சென்ற இரவு நேர தபால் கடுகதி தொடருந்தில் பாய்ந்து குறித்த இளைஞர் தன் உயிரை மாய்த்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்

கந்தளாய் பியந்த மாவத்தை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய கயான் மதுசங்க என்ற திருமணமான இளைஞரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கந்தளாய் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 18 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி