விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்! விசாரணை தீவிரம்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Death
By pavan
ஹிக்கடுவ - வேவல பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த நபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று (31) மாலை குறித்த நபரிடம் இருந்து எந்த தகவலும் கிடைக்காமையால், ஹிக்கடுவ காவல்துறையினருக்கு அறிவித்தனர்.
மேலதிக விசாரணை
பின்னர், காவல்துறையினரும், விடுதி ஊழியர்களும் அந்த நபர் தங்கியிருந்த அறையின் ஜன்னலைத் திறந்து பார்த்தபோது, குளியலறையில் இரத்தக் காயங்களுடன் நபர் இறந்து கிடந்தார்.
வறகொட, களனி பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் காவல்துறை பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், காவல்துறையினர் மரணம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 5 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி