யாழில் திருவிழாவில் பெண் வேடமிட்டு சூட்சுமமாக திருட்டு : சிக்கிய நால்வர்
யாழில் இடம்பெற்ற திருவிழாவில் சங்கிலி அறுத்த குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (20) இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் பெண் வேடமணிந்த ஆண் உள்ளிட்ட இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இடம்பெற்ற தேர்த்திருவிழா
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “இணுவில் பகுதியில் உள்ள ஆலயமொன்றில் இடம்பெற்ற தேர்த்திருவிழாவின் போது, பக்தர்களின் சுமார் நான்கு பவுண் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது.
சங்கிலி அறுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ஆலய சூழலில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய நால்வரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நால்வரையும் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்தநிலையில், கைது செய்யப்பட்டவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
You may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
