யாழில் காவல்துறையினர் மீது தாக்குதல்: சந்தேகநபர் தப்பி ஓட்டம்
யாழில்(Jaffna) கைது செய்ய சென்ற காவல்துறையினரை தாக்கிவிட்டு நபர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றையதினம்(18.03.2025) தெல்லிப்பழை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், தப்பிச் சென்ற சந்தேகநபரை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
கைது நடவடிக்கை
இதையடுத்து, நீதிமன்றத்தின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக தெல்லிப்பழை காவல்துறையினர் குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்கு சென்றுள்ளனர்.
இதன்போது, குறித்த சந்தேகநபர் தகாத வார்த்தைப் பிரயோகங்களை பிரயோகித்து, காவல்துறையினர் மீது தடியால் தாக்குதல் நடாத்தியுள்ளதுடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
தப்பிச்சென்ற சந்தேகநபர்
இந்நிலையில், தாக்குதலுக்கு உள்ளான காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலும், தப்பிச்சென்ற சந்தேகநபரை தேடும் பணியில் தெல்லிப்பழை காவல்துறையினர் ஈடுப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்