யாழில் வீட்டிலிருந்து வந்த தூர்நாற்றம் - சுவிட்ஸர்லாந்தில் இருந்து வந்த நபர் கொலை

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation Switzerland
By Thulsi May 18, 2026 02:07 AM GMT
Report

சுவிட்ஸர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணம் வந்த நபர் ஒருவர் முகமூடி அணிந்த கொள்ளை கும்பலால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் மானிப்பாய் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சுவிட்ஸர்லாந்தில் இருந்து வந்த 67 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். 

யாழில் நீர் தடாகத்தில் நீராடச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம்

யாழில் நீர் தடாகத்தில் நீராடச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம்

தூர்நாற்றம் 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த நபர் நீண்ட காலமாக சுவீஸ் நாட்டில் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்த நிலையில், 2 மாத கால விடுமுறையில் சண்டிலிப்பாயில் உள்ள தமது சொந்த வீட்டில் வந்து தங்கியிருந்துள்ளார்.

யாழில் வீட்டிலிருந்து வந்த தூர்நாற்றம் - சுவிட்ஸர்லாந்தில் இருந்து வந்த நபர் கொலை | Man From Switzerland Murdered In Jaffna

இந்நிலையில், கடந்த 14ஆம் திகதிக்கு பின்னர் அவருடன் குடும்பத்தார் தொடர்பு கொள்ள முடியாத நிலையில், நேற்று (16) அது தொடர்பில் மானிப்பாய் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மானிப்பாய் காவல்துறையினர் வீட்டுக்கு சென்ற போது அங்கு தூர்நாற்றம் வீசியதை அடுத்து, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற போது, குறித்த நபரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

மகிந்தவின் மடியில் பாலச்சந்திரனா...! பதைபதைக்கும் பல ஆதாரங்கள்

மகிந்தவின் மடியில் பாலச்சந்திரனா...! பதைபதைக்கும் பல ஆதாரங்கள்

ஆரம்ப கட்ட விசாரணை

காவல்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராக்கள் சேதமாக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.

யாழில் வீட்டிலிருந்து வந்த தூர்நாற்றம் - சுவிட்ஸர்லாந்தில் இருந்து வந்த நபர் கொலை | Man From Switzerland Murdered In Jaffna

இந்நிலையில் சேதமாக்கப்படுவதற்கு முன்னர் பதிவான காட்சிகளை காவல்துறையினர் ஆராய்ந்த நிலையில் முகமூடி அணிந்த கொள்ளைக் கும்பல் ஒன்று உள்நுழைந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த நபரின் வீட்டிற்குள் புகுந்தவர்கள், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராக்களை சேதமாக்கிய பின்னர், அவரை கொலை செய்து விட்டு வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பெருந்தொகை பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதேவேளை உயிரிழந்தவரின் உடலின் 8 இடங்களில் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பதவி விலகத் தயாராகும் மேல் மாகாண ஆளுநர்: ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்

பதவி விலகத் தயாராகும் மேல் மாகாண ஆளுநர்: ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023