ரணிலின் வீட்டில் வெளிநாட்டு மதுபான போத்தலை திருடியவருக்கு ஏற்பட்ட நிலை
Sri Lanka Police
Galle Face Protest
Ranil Wickremesinghe
Sri Lanka Magistrate Court
By Sumithiran
வெளிநாட்டு மதுபான போத்தல் திருட்டு
கடந்த ஜுலை மாதம் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்தில் இருந்து வெளிநாட்டு மதுபான மதுபான போத்தல் ஒன்றை திருடிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது கொழும்பில் உள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு தீ வைக்கப்பட்ட போது, அங்கிருந்து வெளிநாட்டு மதுபான போத்தல் ஒன்றை திருடியதாக குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நீதிமன்றம் கொடுத்த உத்தரவு
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
சந்தேக நபரை 2022 ஓகஸ்ட் 24 ஆம் திகதி புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 20 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி