ட்ரம்பை கொலை செய்ய முயன்றவருக்கு நேர்ந்த கதி
2024ஆம் ஆண்டு ஃப்ளோரிடாவில் உள்ள ஒரு கொல்ஃப் மைதானத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கொலை செய்ய முயன்றதாக குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஃபோர்ட் பியர்ஸ் நகரில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி ஐலீன் கேன்னன் இந்த தீர்ப்பை அறிவித்துள்ளார்.
நீதிமன்றில் ஏற்பட்ட பரபரப்பு
இதே நீதிமன்றத்தில், கடந்த செப்டம்பர் மாதம் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்ட உடனே அந்த நபர் தன்னைத் தானே குத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த வழக்கில் குற்றவாளியான ரயன் ரௌத், தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்காததும், பொறுப்பேற்க மறுத்ததையும் சுட்டிக்காட்டி, பரோல் இல்லாத ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என அரசு தரப்பு வலியுறுத்தியது.
எனினும், தற்போது 60 வயதைக் கடந்து வரும் ரௌத்துக்கு 27 ஆண்டுகள் மட்டுமே தண்டனை வழங்க வேண்டும் என அவரது சட்டத்தரணி கோரினார்.
தொடர் சிறை
இறுதியில், நீதிமன்றம் ரௌத்துக்கு சிறை தண்டனை விதித்ததுடன், துப்பாக்கி தொடர்பான ஒரு குற்றத்திற்காக கூடுதலாக 7 ஆண்டுகள் தொடர் சிறை தண்டனையும் வழங்கியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் தண்டனை அறிவிக்க திட்டமிடப்பட்டிருந்த இந்த வழக்கு, ரௌத் தன்னைத் தானே பிரதிநிதித்துவப்படுத்தாமல், வழக்கறிஞரை நாட முடிவு செய்ததையடுத்து ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |