திருகோணமலையில் கடற்றொழிலுக்காக சென்றவர் மாயம்
திருகோணமலை வீரநகர் பகுதியில் இருந்து கடற்றொழிலுக்காக சென்ற கடற்றொழிலாளர் ஒருவர் மாயமாகியுள்ளார்.
குறித்த கடற்றொழிலாளர் சென்ற படகு ஒன்று, நேற்று (03) காலை கடலில் பயணித்த கப்பல் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இவ்விபத்தில் படகில் இருந்த 25 வயதுடைய இளம் கடற்றொழிலாளர் ஒருவரே கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
மீட்புப் பணி
காணாமல் போனவர் திருகோணமலை, சீனக்குடா (China Bay) கிராமத்தைச் சேர்ந்த உதித குமார (Uditha Kumara) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் விபத்து நடந்த உடனே அருகில் இருந்த கடற்றொழிலாளர்களும், கடற்படையினரும் இணைந்து மீட்புப் பணிகளைத் ஆரம்பித்துள்ளனர்.
எனினும், இதுவரை அவரது உடல் கண்டெடுக்கப்படவில்லை என்பதுடன், அவரைத் தேடும் தீவிர தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் விபத்துக்கான காரணம் மற்றும் மோதிய கப்பல் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையுடன் கடற்படையினரும் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
4 நாட்கள் முன்