முல்லைத்தீவில் மணல் ஏற்றும் பணிக்கு சென்றவர் உயிரிழப்பு
Sri Lankan Tamils
Mullaitivu
By Rajukaran
முல்லைத்தீவு, சிராட்டிகுளம் - கிரிட்டிச்சுட்டான் சந்திப் பகுதியில் மணல் ஏற்றும் பணிக்காக வந்த 33 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (15) நள்ளிரவு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முல்லைத்தீவு, அளம்பில் தங்கபுரத்தைச் சேர்ந்த, ஒரு பிள்ளையின் தந்தையான வேலுப்பிள்ளை பகிரதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நீதவான் நடவடிக்கை
சம்பவம் தொடர்பில் நட்டாங்கண்டல் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று (16) மாலை சுமார் 4 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட பதில் நீதவான் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைப் பார்வையிட்டார்.

இதனையடுத்து, சடலம் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி