எரிபொருள் விலை எப்படி இருந்திருக்க வேண்டும்! ஆதாரத்தை வெளியிட்ட மங்கள
கடந்த 2018 ஆம் ஆண்டு அன்றைய நிதியமைச்சர் மங்கள சமரவீர எரிபொருள் விலைகளை தீர்மானிப்பதற்காக விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்தியதுடன் அந்த சூத்திரத்தின் அடிப்படையில், மாதந்தோறும் எரிபொருட்களின் விலைகள் தீர்மானிக்கப்பட்டன.
எனினும் தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் இந்த விலை சூத்திரத்தை கைவிட தீர்மானித்தது.
இந்த நிலையில், 2018ம் ஆண்டு தன்னால் அறிமுகம் செய்யப்பட்ட எரிபொருள் விலை மாற்றம் தொடர்பான சூத்திரம் தற்போது நடைமுறையில் இருந்தால் நாட்டில் எரிபொருட்களின் விலைகள் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர ஆதாரத்தை வௌியிட்டுள்ளார்.
மங்கள சமரவீர தனது டுவிட்டர் பக்கத்தில் தான் அறிமுகப்படுத்திய விலை சூத்திரத்திற்கு அமைய தற்போது எரிபொருள் விலைகள் எப்படி இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
A peep in to an era not so long ago: the ‘ V1+V2+V3+V4’ era……’ pic.twitter.com/kRjrSdiRIy
— Mangala Samaraweera (@MangalaLK) June 12, 2021