இந்திய தேர்தல் பிரச்சாரத்தில் தெறிக்கவிடப்படும் யொஹானியின் "மெனிகே மகே ஹிதே"...
இலங்கை பாடகி யொஹானியின் “மெனிக்கே மகே ஹிதே” சிங்கள பாடல் பாடல் இலங்கையைத் தாண்டி உலகளவில் பிரபல்யமடைந்திருந்தது.
பல நாடுகளில் அவரவர் மொழிகளில் இந்தப்பாடல் மொழிபெயர்க்கப்பட்டு பாடப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்தியாவில் இந்த பாடல் மிக பிரபல்யமடைந்துள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள் என அனைவர் மனங்களிலும் இந்த பாடல் இடம்பிடித்தது.
இதேவேளை, பாடகி யொஹானிக்கு இந்திய - இலங்கை கலாசார தூதுவர் என்ற புதிய பதவியையும் இந்தியா வழங்கியிருந்தது.
இந்த நிலையில் இந்தியாவில் தேர்தல் பிரச்சாரங்களிலும் தற்போது மெனிக்கே மகே ஹிதே பாடல் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு பாடப்படுகின்றது.
அந்த வகையில் மேற்கு வங்காள இடைத்தேர்தலில் போட்டியிடும் மம்தா பானர்ஜி தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார்.
இவரது தேர்தல் பிரச்சார பாடலாக மெனிக்கே மகே ஹிதே பாடல் பயன்படுத்தப்படுகின்றமை வைரலாகி வருகின்றது..
மெனிக்கே மகே ஹிதே என்பதற்கு பதிலாக "Maa Mati Manush Hithe" என மாற்றப்பட்டுள்ளது. ராஜேஷ் சக்ரவர்த்தி, தனது மகள் அபராஜிதாவுடன் பெங்காலியில் இந்த பாடலை பாடியுள்ளனர்.
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        