திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: சர்வதேசத்திற்கு சட்டத்தரணியின் கோரிக்கை
எத்தனை நூற்றாண்டுகள் , எத்தனை ஆட்சிகள் மாறினாலும் பௌத்த சிங்கள சித்தாந்தங்களை மனோபாவங்களை இந்த மண்ணில் இருந்து அகற்ற முடியாது என தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை சம்பவம் இதனை எடுத்துக்காட்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
திருகோணமலையில் அடாத்தாக புத்தர் சிலை நிறுவப்பட்டமைக்கு தமிழ் மக்கள் கூட்டணி தமது வன்மையான கண்டனங்களை தெரிவித்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச சமூகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை என்பவை உடனடியாக இந்த விடயத்தில் தலையிட்டு வடக்கு கிழக்கில் தமிழர்கள் வாழும் பிரதேசத்தில் தமிழர்கள் சுய அதிகாரமிக்க தன்னாட்சி மிக்க பெரு பிரதேசமாக மாற்றஅரசியல் அமைப்பு பொறிமுறையில் மாற்றத்தை ஏற்படுத்த காத்திரமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அவர் வலியுருத்தியுள்ளார்.
மேலும், அவர் தெரிவித்த விரிவான கருத்துக்கள் காணொளியில்,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..! 19 மணி நேரம் முன்