மன்னாரில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து! இளம் தாய் காயம்
Sri Lanka Police
Mannar
By Laksi
மன்னார்- நாட்டான் பேருந்து நிலையத்தின் முன்பாக உள்ள பிரதான வீதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவமானது இன்று (31) நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி
அரிப்புத்துறை பகுதியிலிருந்து வங்காலை நோக்கி ஆண் ஒருவர் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிளும் நாட்டான் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து அரிப்பு துறை நோக்கி குழந்தை ஒன்றுடன் குறித்த இளம் தாய் பயணித்த மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளாகியது.
குறித்த விபத்தில் தாய் காயங்களுக்கு உள்ளாகிய போதும் குழந்தை காயம் எதுவுமின்றி தெய்வாதீனமாக காப்பாற்றப்பட்டுள்ளார்.
விபத்தில் இளம் தாய் ஒருவர் காயமடைந்த நிலையில் நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |