பாழடைந்த வீட்டில் மனிதபாவனைக்கு உதவாத வகையில் உணவு தயாரிப்பு : தமிழர் பகுதியில் சம்பவம்

Mannar Healthy Food Recipes
By Jaso Apr 02, 2025 10:48 PM GMT
Report

மன்னார் மூர்வீதி பகுதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் மனித பாவனைக்கு உதவாத வகையில் சுகாதார சீர் கேடுகளுடன் உணவுப்பொருட்கள் தயாரிக்கப்பட்டு மன்னாரில் உள்ள உணவகங்களுக்கு விற்பனைக்காக வழங்கப்பட்டு வந்த நிலையில் குறித்த உணவு தயாரிக்கும் பாழடைந்த வீட்டை இன்றைய தினம் புதன்கிழமை (2)மன்னார் நகர சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரூபன் லெம்பேட் தலைமையிலான குழுவினர் சுற்றி வளைத்துள்ளனர்.

 மன்னார் மூர்வீதி பகுதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் உணவு பொருட்கள் தயாரிக்கப்படுவதால் அங்கு பாரிய துர்நாற்றம் வீசி வருவதாக மன்னார் நகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை க்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இன்றைய தினம் புதன்கிழமை (2) காலை அப்பகுதிக்குச் சென்ற மன்னார் நகர சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரூபன் லெம்பேட் தலைமையிலான குழுவினர் மனித பாவனைக்கு உதவாத ஒரு தொகுதி உணவுப் பொருட்களை மீட்டுள்ளனர்.

பாழடைந்த வீட்டில் உணவு தயாரிப்பு

மன்னார் மூர்வீதியில் மக்கள் வசிக்க முடியாத நிலையில் காணப்பட்ட குறித்த வீட்டில் பாரிய அளவிலான உணவு பொருள்கள் தயாரிக்கப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டது.

பாழடைந்த வீட்டில் மனிதபாவனைக்கு உதவாத வகையில் உணவு தயாரிப்பு : தமிழர் பகுதியில் சம்பவம் | Mannar Food Not Conducive To Human Consumption

குறித்த பகுதியில் இருந்து மனித பாவனைக்கு உட்படுத்த முடியாத சுகாதார வசதிகள் எவையும் முன்னெடுக்காத நிலையில் உணவுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வந்தமை சுகாதார வைத்திய அதிகாரிகள் குழுவினரால் கண்டு பிடிக்கப்பட்டது.

பிறந்து 43 நாட்களேயான பெண் குழந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு : யாழில் துயரம்

பிறந்து 43 நாட்களேயான பெண் குழந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு : யாழில் துயரம்

விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நகர சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரூபன் லெம்பேட் தலைமையிலான குழுவினர் அங்கிருந்து மனித பாவனைக்கு உதவாத வகையில் தயாரிக்கப் பட்ட உணவு பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.

உணவுப் பொருட்களை அழிக்க நடவடிக்கை

கைப்பற்றப்பட்ட ஒரு தொகுதி உணவுப் பொருட்களை நீதிமன்றத்தின் அனுமதி பெற்று அழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன்,எவ்வித அனுமதியும் இன்றி மனித பாவனைக்கு உதவாத வகையில் உணவு தயாரித்த குறித்த நிலையத்தின் உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாழடைந்த வீட்டில் மனிதபாவனைக்கு உதவாத வகையில் உணவு தயாரிப்பு : தமிழர் பகுதியில் சம்பவம் | Mannar Food Not Conducive To Human Consumption

குறித்த இடத்தில் தயாரிக்கப்படுகின்ற உணவுப் பொருட்கள் மன்னார் பகுதியில் உள்ள பல்வேறு உணவகங்களுக்கு விற்பனைக்காக வழங்கப்பட்டமையும் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாக மன்னார் நகர சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரூபன் லெம்பேட் தெரிவித்தார்.  

ட்ரம்ப் விதிக்கும் வரியால் பாதிக்கப்படவுள்ள நாடுகள் எவை தெரியுமா…!

ட்ரம்ப் விதிக்கும் வரியால் பாதிக்கப்படவுள்ள நாடுகள் எவை தெரியுமா…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016