புலம்பெயர் தமிழ் அமைப்பால் மன்னார் வைத்தியசாலைக்கு கிடைக்கவுள்ள வரப்பிரசாதம்
மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் கருவுறுதல் சிகிச்சைப் பிரிவை உருவாக்குவதற்கான நடவடிக்கையை எடுத்திருக்கிறது தமிழ் டயஸ்போறா அலையன்ஸ் (Tamil Diaspora Alliance) என்ற அமைப்பு.
மாவட்ட வைத்தியசாலை நிர்வாகம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க கருவுறுதல் சிகிச்சைப் பிரிவை (infertility clinic) ஆரம்பிக்கத் தேவையான நடவடிக்கையும், தொடர்ந்து இலவசமாக மன்னார் மக்கள் தங்கள் மாவட்டத்திலேயே கருவுறும் சிகிச்சை பெறுவதற்கான நிதி ஆதரவையும் Tamil Diaspora Alliance கொடுப்பதற்கு இணங்கியிருப்பதாக அதன் இயக்குனர் சபை செயலாளர் காயத்ரி மனோகரன் தெரிவித்தார்.
முன்னதாக ஒக்டோபர் மாதம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் கருவுறுதல் சிகிச்சை தொடர்வதற்கான பணிகள் தமிழ் டயஸ்போறா அமைப்பால் நிறைவேற்றப்பட்டிருந்தது தெரிந்ததே.
மன்னாரில் தை மாதம் முதல் இந்த சிகிச்சை பிரிவு இயங்கத் தொடங்கிவிடும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் காயத்ரி.
தமிழ் புலம்பெயர் சமூகத்தில் உருவாகிய இந்த புதிய இளைய தலைமைத்துவ அமைப்பு பல்வேறு தாயக வேலைத்திட்டத்திலும் புலம் பெயர் இளைய சமூகத்தினருக்கான வேலைத் திட்டத்திலும் முனைப்போடு இயங்கிவருகிறது.