இளம் பெண்ணின் உயிர்காக்க புலம்பெயர் அமைப்புக்களிடம் உருக்கமான வேண்டுகோள்!
மன்னார் கறுக்கா முறிப்பு அச்சங்குளம் நானாட்டான் பிரதேசத்தைச் சேர்ந்த 21வயது யுவதி ஒருவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துள்ளதால், மகளின் உயிரைக் காப்பாற்றுவதற்காக புலம்பெயர் மற்றும் இலங்கை உறவுகளிடம் தாயார் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இராசரட்னம் தர்சினி என்ற யுவதியே இவ்வாறு ஆபத்தான நிலையில், உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கின்றார்.
தந்தை கைவிட்டுச் சென்றுள்ள நிலையில் பெரும் கஷ்டங்களுக்கு மத்தியில் தர்சினி கல்வி கற்று வந்தார். திடீரென இரண்டு சிறுநீரகங்களும் செலிழந்ததால், மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுப் பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உருக்கமான வேண்டுகோள்

இதன் போது மாற்று சிறுநீரகம் ஒன்றைப் பொருத்த வேண்டுமென யாழ் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். அவ்வாறு மாற்று சிறுநீரகச் சத்திர சிகிச்சை மேற்கொள்வதானால் சுமார் 60 இலட்சம் ரூபா வரை செலவாகுமெனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
மிகவும் வறுமைப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த இவர்களுக்கு வைத்தியர்கள் குறிப்பிடும் பெரும்பணத்தொகையை வழங்க முடியாதுள்ளது.
ஆகவே தமது குடும்ப நிலையைக் கருத்தில் கொண்டு நன்கொடையளர்கள், மனிதாபிமான நிறுவனங்கள் மற்றம் புலம்பெயர் அமைப்புக்கள் முடிந்தளவு நிதி உதவி செய்யுமாறு பெண்ணின் தாயர் இராசரட்னம் விஜயராணி உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவ்வாறு நிதி உதவி வழங்க விரும்புவோர் 044200130040044 என்ற இலங்கை மக்கள் வங்கி இலகத்திற்கு வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி வசதி இல்லாதால் உடனடியாக மாற்று சத்திர சிகிச்சை செய்ய முடியவில்லை. இதனால் சுமார் ஒரு வருடத்துக்கும் மேலாக தனது மகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தாயார் தெரிவித்துள்ளார்.
மாற்றுச் சத்திர சிகிச்சை செய்யப்படவில்லையானால், அவருடைய உயிருக்கு ஆபத்து நேரிடுமென வைத்தியர்கள் கூறியுள்ளனர். மேலும் தாமதிக்காமல் உடனடியாக மாற்று சிறுநீரக சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமெனவும் வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளதால் நல்லுள்ளம் கொண்டோரின் உதவிகளை எதிர்பார்த்திருப்பதாகவும் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உதவி வழங்குவதற்கு முன்வருவோர் 0764641083 (ஆர். விஜயராணி) என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.