மன்னார் - மடு அன்னையின் ஆவணித் திருவிழா ஆரம்பம் - 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பு
Mannar
Festival
By Sathangani
மன்னார் - மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா திருப்பலி இன்று(15) காலை 6.15 மணிக்கு ஆரம்பமாகிதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் மடு அன்னையின் ஆவணி மாத திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஓகஸ்ட் 15 ஆம் திகதி இடம்பெறுகிறது.
5 இலட்சத்திற்கும் அதிகமானோர்

இம்முறை ஆவணி மாத திருவிழா திருப்பலி பரிசுத்த பாப்பரசரின் பிரதிநிதி பேராயர் பிறாயன் ஊடக்கே ஆண்டகை தலைமையில் ஆயர்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத் திருப்பலியாக ஒப்புக் கொடுக்கின்றனர்.
இந்த திருவிழா திருப்பலியில் நாட்டின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை மடு திருத்தலத்திற்கு விசேட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி