தமிழர் பகுதியில் சீரற்ற முறையில் சீர் செய்யப்படும் பிரதான வீதி..! மக்கள் கடும் விசனம்
மன்னார்(Mannar) மாவட்டத்தின் பிரதான வீதியானது வீதி அபிருத்தி அதிகாரசபையினால் சீரற்ற முறையில் சீர் செய்யப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மன்னார் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான செளத்பார் தொடருந்து நிலைய வீதி பல வருடங்களாக ஒழுங்கான பராமறிப்பின்றி சேதமடைந்து காணப்பட்டு வருகின்றமை தொடர்பில் மக்கள் பல்வேறு குற்றசாட்டுக்களை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.
முன்னதாகவே குறித்த வீதியை புணரமைப்பு செய்வதற்கான நிதி ஒதிக்கீடு செய்யப்பட்ட போதிலும் பல்வேறு காரணங்களால் வீதி அபிவிருத்தி பணிகள் இடம்பெறாத நிலையில் ஒதுக்கப்பட்ட நிதியும் திரும்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
சீரற்ற வீதி சீராக்கல் பணி
இந்த நிலையில், தொடருந்து பயணங்களுக்குக்காக செல்லும் பொது மக்கள் உட்பட சாந்திபுரம் செளத்பார் உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த மக்கள் இந்த வீதியை ஒழுங்கான முறையில் பயன்படுத்த முடியாத நிலையில் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இவ்வாறான பின்னணியில் அவ் அப்போது வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் செய்யப்படும் சீராக்கும் பணிகளும் ஒழுங்கான முறையில் மேற்கொள்ளப்படுவதில்லை என பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குறிப்பாக வீதிகளில் பள்ளங்களை நிரப்பும் பணிகள் கூட சீரற்ற முறையில் இடம் பெறுவதாகவும் அவையும் குறுகிய காலப்பகுதியில் சேதமடைவதாகவும் சாந்திபுரம் கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இவ்வாறான நிலையில் பயன்படுத்த முடியாத வீதியை சீராக்கல் என்ற பெயரில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அரச பணத்தை வீணக்குவதை விடுத்து வீதியை முழுமையாக புணரமைத்து தருமாறு அப் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![Gallery](https://cdn.ibcstack.com/article/42aa1e04-7aa3-4697-9bd1-cfca28b6fdf6/25-67a5c38e65edd.webp)
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
![ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?](https://cdn.ibcstack.com/article/02ea68d2-1a0a-455a-beb8-b3f401d35089/25-67a5ba9954168-md.webp)
ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்? 11 மணி நேரம் முன்
![எமக்குச் சுதந்திரம் மறுக்கப்படும் வரை இந்நாள் கரிநாளே !](https://cdn.ibcstack.com/article/cecc0af8-9c16-41aa-81f4-a89effdfc827/25-67a1daf656617-sm.webp)