மன்னார் துயிலுமில்லத்தில் கண்ணீர் மல்க ஒன்று திரண்ட உறவுகள்
Tamils
Mannar
By Sumithiran
மன்னார் மாவட்ம்ட மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு இன்று புதன் (27) மாலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
தமிழ் தேசிய விடுதலைக்காக தம் உயிரை தியாகம் செய்த இரு மாவீரர்களின் தந்தை ஒருவர் பொதுச் சுடரை ஏற்றி நினைவேந்தலை ஆரம்பித்து வைத்தார்.
ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் உறவினர்கள் பெருந்திரளான மக்கள் ,அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள், என ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்று திரண்டு கண்ணீர் மல்க உணர்வுபூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இராணுவத்தின் வசமுள்ள துயிலும் இல்லங்களை அநுர அரசு விடுவிக்க வேண்டும் 17 மணி நேரம் முன்
பிரபாகரன் என்ற பெயர் இல்லாத இதயங்களில்லை !
1 நாள் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி