யோஷித ராஜபக்சவுடன் குற்றஞ்சாட்டப்பட்ட அவரது பாட்டி வழக்கிலிருந்து விடுவிப்பு
Sri Lanka Politician
Yoshitha Rajapaksa
By Pavi
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்சவுடன் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்டை குறித்த வழக்கிலிருந்து விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கை எதிர்கொள்ளும் வகையில் பிரதிவாதிக்கு உகந்த மனநிலை இல்லை என முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த பின்னர் நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இதேவேளை, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் தான் குற்றமற்றவர் என யோஷித ராஜபக்ச இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ்
குறித்த குற்றச்சாட்டுகள் திறந்த நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டபோது, அவற்றை மறுத்து தான் குற்றமற்றவர் என அவர் அறிவித்துள்ளார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
13ம் ஆண்டு நினைவஞ்சலி