வீதிகளில் வலைகளை உலரவைத்தவர்களுக்கு மன்னார் நகரசபை அதிர்சி வைத்தியம்
மன்னாரில் (Mannar) வீதிகளில் ஆபத்தான முறையில் உலரவைக்கப்பட்ட வலைகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த நடவடிக்கை இன்று (10) மன்னார் நகரசபை ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாகவே நீண்ட காலங்களாக மக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சில கடற்றொழிலாளர்கள் ஆபத்தான முறையில் பிரதான வீதிகளிலும் உள்ளகவீதிகளிலும் வலைகளை உலரவிடுவதனால் துர்நாற்றம் உட்பட விபத்துக்களும் ஏற்பட்டு வந்துள்ளது.
நடவடிக்கை
இதனால் தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் தொடர்சியாக கிடைக்க பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய முதல் கட்டமாக இன்றைய தினம் ஜிம்றோன் நகர் மற்றும் எமில் நகர் பகுதிகளில் உலரவிடப்பட்டிருந்த வலைகள் நகரசபையினால் அப்புறப்படுத்தப்பட்டு கையகப்படுத்தப்பட்டுள்ளது.
அதே நேரம் மன்னார் நகரசபை எல்லைக்குள் உள்ள பிற பகுதிகளிலும் தொடர்சியாக போக்குவரத்துக்கும் மக்களின் நடமாட்டத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் வலைகள் உலரவிடும் கடற்றொழிலாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதுடன் வலைகளும் கையகப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



