தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவருக்கு பயங்கரவாத தடுப்புப் பிரிவு அழைப்பாணை!
investigation
mannar
northern province
sri lanak
TID
By Kalaimathy
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரனை கொழும்பில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் காவல்துறையினர் ஊடாக குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், எதிர்வரும் 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு முன்னிலையாகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவரான வி.எஸ்.சிவகரனை கொழும்பில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவில் முன்னிலை ஆகும் போது அன்றைய தினம் குறித்த அமைப்பு சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் எடுத்து வருமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


