மக்களை கொன்று மின்சாரம் எதற்கு!
மன்னாரில் (Mannar) காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (21) 19 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த போராட்டமானது மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்து சங்க உறுப்பினர்கள் மற்றும் மன்னார் முச்சக்கர வண்டி சங்கத்தினர் ஆதரவு வழங்கியதுடன் போராட்டத்திலம் கலந்து கொண்டுள்ளனர்.
தொடர் போராட்டம்
மன்னாரில் புதிதாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவை முழுமையாக நிறுத்தும் வரை தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இன்றைய தினம் (21) இடம்பெற்ற குறித்த போராட்டத்தின் போது வெளிநாட்டு பிரஜை ஒருவர் கலந்து கொண்டு மக்களின் போராட்டம் குறித்து கேட்டறிந்து கொண்டார்.
ஜனாதிபதி ஒரு மாத கால அவகாசம் கோரியுள்ள நிலையில் மக்களுக்கு நிரந்தரமான ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முன் வைத்துள்ளனர்.
போராட்டத்தை தொடர்ந்து மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இருந்து மாவட்ட செயலகம் வரை ஊர்வலமும் முன்னெடுக்கப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





