தமிழருக்கு எதிராக ஆரம்பித்த வன்முறை ஆட்டம்தான் இன்று உங்கள் மீதே தொடர்கிறது! மனோ கணேசன் சீற்றம்

Sri Lanka Parliament Mano Ganeshan Sri Lankan political crisis
By S P Thas May 18, 2022 11:56 AM GMT
Report

முதல் அரசியல் கொலையை, 1959ல் பண்டாரநாயக்காவை கொலை செய்து, ஒரு பெளத்த ஆமதுரு ஆரம்பித்து வைத்தார்.  அதன்பின் பெளத்த மதத்தை அரசியலில் கலக்க விட்டு, இந்நாட்டை அழித்து விட்டீர்கள் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு எம்பியுமான மனோ கணேசன் ஆவேசமாக பேசியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கடுமையாக கூறியிருந்தார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

"இன்றைய தினங்களில், 2009 ஆண்டில் தமிழ் மக்கள், நூறு, ஆயிர, இலட்சக்கணக்கில், கொல்லப்பட்டார்கள். கண்மூடித்தனமான எறிகணை தாக்குதல்களில் கொல்லப்பட்டார்கள். இன்று ஆளும் அணி அமைச்சர்களின் வீடு, சொத்துகளை எரித்து கொலை செய்த இந்த வன்முறை, அமரகீர்த்தி என்ற அப்பாவி எம்பியை அடித்தே கொலை செய்த வன்முறைகள், இந்த யுத்தம் மற்றும் 1983, 1977, 1958 இனக்கலவரங்களிலேயே ஆரம்பித்தது."

"இந்த தீவைப்பு தமிழர்களாகிய எங்களுக்கு புதிதல்ல. 1983 எங்கள் ஹவ்லக் வீதி வீட்டை கொளுத்தினார்கள். எங்கள் புறக்கோட்டை வியாபார நிலையத்தை கொளுத்தினார்கள்.  ஒரு கம்பீரமான சினிமா கலைஞரான என் தந்தை அதன் பின் மனமுடைந்து சில காலம் வாழ்ந்து இறந்து போனார்."

"இதோ இந்த ஆசனத்தில்தான் என் நண்பன் ரவிராஜ் அமர்ந்திருந்தான். இன்றுள்ள டிஎன்ஏ எம்பிக்கள் புதியவர்கள். அவர்களுக்கு அவரை தெரியாது. ஆனால் எனக்கு நன்கு தெரியும். கொழும்பில் வாழ்ந்த நாம் இருவரும் 2001ம் ஆண்டில் இருந்தே நல்ல நண்பர்கள்.

சிங்கள மக்களுக்கு தமிழர் பிரச்சினையை சிங்களத்தில் சொல்ல முயன்றதற்காக ரவிராஜ் கொல்லப்பட்டார்." "அன்று நானும், ரவியும் சேர்ந்து பலவந்த கடத்தல், சட்ட விரோத படுகொலைகள், வெள்ளை வான் கலாச்சாரத்துக்கு எதிராக போராடினோம். என்னையும், ராகமை, களுத்துறை, தெமட்டகொடை ஆகிய மூன்று இடங்களில் கொல்ல முயன்றார்கள்." "இந்த வன்முறை ஆட்டம்தான் இன்றும் தொடர்கிறது. "

"முதல் அரசியல் கொலையை, 1959ல் பண்டாரநாயக்காவை கொலை செய்து, ஒரு பெளத்த ஆமதுரு ஆரம்பித்து வைத்தார்.  அதன்பின் பெளத்த மதத்தை அரசியலில் கலக்க விட்டு, இந்நாட்டை அழித்து விட்டீர்கள்." "இந்த ஆமதுருக்கள் அரசியலில் வேண்டாம். கைகூப்பி கோருகிறேன். இவர்கள்தான் இத்தனைக்கும் காரணம்."

"நாம் ஆமதுருமார்களை பன்சலைக்கும், குருக்கள்மார்களை கோவிலுக்கும், இமாம்களை பள்ளிவாயல்களுக்கும், பாதிரிகளை தேவாலயங்களுக்கும் போக சொல்வோம். இவர்கள் இங்கே வேண்டாம். அரசியலில் வேண்டாம்" "இந்த சபையில் ஒரு ஆமதுரு மந்திரி இன்று இருக்கிறார். அவரே இங்கு வந்த கடைசி மந்திரியாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறேன்."

"இந்நாட்டின் இன்றைய சீரழிவுக்கு இவர்கள்தான் காரணம். எவருக்கும் இவர்களது அறிவுரை வேண்டுமென்றால், அவர்களது மத ஸ்தலங்களுக்கு போய் கேட்கலாம். இங்கே வேண்டாம்". "கடந்த தேர்தலின் போது ஒரு கேலிகூத்து நடந்தது. களனி விகாரை ஆமதுரு சொன்னார்.

களனி கங்கை ஆறு இரண்டாக பிளந்ததாம். 'டோம்' என சத்தம் வந்ததாம். பாதாளத்தில் இருந்து நாகராஜன் வந்தாராம். 'நாட்டை காக்க ஒரு மன்னன் வருகிறான்' என ஒரு அசரீதி கேட்டதாம். என்ன ஒரு கேலிக்கூத்து இது! இப்படி வெட்கமில்லாமல் சொன்ன அந்த ஆமதுரு இன்று களனி பல்கலைக்கழக உப வேந்தராம். வெட்கம்..!

சும்மா இந்த வன்முறைகளை பற்றி, இந்த பக்கமும், அந்த பக்கமும் மாறி, மாறி குற்றம் சாட்டுவதில் பயனில்லை. அனைத்துக்கும் மூல காரணம் இந்த ஆமதுருக்கள்தான். இவர்களை பன்சலைக்கு அனுப்புங்கள். எங்கள் குருக்கள், இமாம்கள், மாதிரிகள் ஆகியோரும் தத்தம் மத ஸ்தலங்களுக்கு போக வேண்டும். நாடு உருப்படும் என்றார்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026