மனுஷ நாணயக்காரவின் சகோதரருக்கு விளக்கமறியல்
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் (Manusha Nanayakkara) சகோதரரான திசர ஹிரோஷன நாணயக்கார (Thisara Iroshana Nanayakkara) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நேற்று (28) கைது செய்யப்பட்ட அவரை இன்று (29) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திசர ஹிரோஷன நாணயக்காரவை எதிர்வரும் 2025 ஜனவரி 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது
நிதி மோசடி செய்ததாக எழுந்த முறைப்பாட்டையடுத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் (CID) சந்தேகநபர் கைது நேற்று (28) பிபிலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
அதாவது பின்லாந்து (Finland) நாட்டில் தொழில் வாய்ப்பை பெற்று தருவதாக வாக்குறுதியளித்து, 40 இலட்சம் ரூபா பணம் கேட்டு அதில் 30 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் சந்தேகநபர் கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |