நெல்லை கைவிட்டு சோளச்செய்கையில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்
Matale
Corn
Ministry of Agriculture
By Sumithiran
மாத்தளை மாவட்டத்தில் நெற்செய்கைக்குப் பதிலாக பல பிரதேசங்களில் ஊடுபயிர்கள் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளதாக விவசாய அமைப்புகள் தெரிவிக்கின்றன.
காலநிலை மாற்றம் மற்றும் குறுகிய கால பயிர்களில் அதிக மகசூல் கிடைக்கும் என எதிர்பார்த்து விவசாயிகள் ஊடுபயிர்களை பயிரிட்டுள்ளனர்.
நல்ல நிலையில் பயிர்கள்
மரக்கறி தவிர மாத்தளை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் சோளம் பயிரிடப்பட்டுள்ளதுடன் பயிர்கள் நல்ல நிலையில் உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது பல பிரதேச செயலகப் பிரிவுகளில் பல சோளத்தோட்டங்கள் காய்க்கும் நிலைக்கு வந்துள்ளன.
நாவுல, பல்லேபொல, லக்கல மற்றும் வில்கமுவ பிரதேசங்களில் சோளச் செய்கையில் அதிகளவு விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
2ம் ஆண்டு நினைவஞ்சலி