இலங்கைக்கு படையெடுக்கும் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான திட்டமிடல் தொடர்பில் ஆரம்ப ஆய்வுகளை மேற்கொள்வதற்காக பொதுநலவாய அமைப்பின் சர்வதேச தேர்தல் கண்காணிப்புக் குழுவொன்று இலங்கை வந்துள்ளதாக பவ்ரல்( PAFFREL) அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி(Rohana Hettiarachch) தெரிவித்தார்.
இவ்வாறு வந்த அவர்கள் பவ்ரல் அமைப்பின் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடிய நிலையில், ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ள தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் வெளிநாட்டு மையத்திற்கு அறிக்கை அனுப்ப உள்ளனர்.
மேலும் மூன்று சர்வதேச தேர்தல் கண்காணிப்பு குழுக்கள்
இதேவேளை மேலும் மூன்று சர்வதேச தேர்தல் கண்காணிப்பு குழுக்களும் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
பவ்ரல் அமைப்பினால் தயாரிக்கப்பட்ட விஞ்ஞாபனம்
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயாராக உள்ள மூன்று அரசியல் கட்சிகள் பவ்ரல் அமைப்பினால் தயாரிக்கப்பட்ட விஞ்ஞாபனத்தை ஏற்றுக்கொண்டு அதில் கூறப்பட்டுள்ளபடி செயற்படுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |