வெளிநாட்டு வேலைவாய்ப்பு: இலங்கையர்களுக்கு வெளியான நற்செய்தி
ஜப்பானில் தாதியர் துறையில் இலங்கையர்களுக்கு பல வேலைவாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கும் ஐ.எம். ஜப்பானுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விளைவாக இந்த வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

நீண்ட வரிசையில் மக்கள்...! நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாட்டு அபாயம் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
குறைந்தபட்ச சம்பளம்
அதன்படி, 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் இந்த வாய்ப்பை இலவசமாகப் பெற தகுதியுடையவர்கள் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், குறித்த வேலைவாய்ப்பு வாய்ப்புகள் 5 வருட காலத்திற்குக் கிடைக்கும் என்பதுடன், குறைந்தபட்ச சம்பளம் 400,000 இலங்கை ரூபாய் கிடைக்கும் எனவும் தெரியவருகிறது.
மேலும், இந்த வேலைப் பிரிவின் முக்கிய அம்சங்களில் ஒன்று, இந்த வேலை தேடுபவர்களும் ஜப்பானிய நாட்டினருக்குக் கிடைக்கும் அனைத்து சலுகைகளுக்கும் உரிமையுடையவர்கள்.
வேலைக்கு விண்ணப்பிக்கும்போது ஜப்பானிய மொழி அறிவு கட்டாயமாகும்.
கட்டாயத் தேவை
JFT அல்லது JLPT N4 நிலை மற்றும் திறன் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆண்கள் மற்றுபெண்கள் இருவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்பதுடன் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியிருப்பது கட்டாயமாகும்.
உடலில் பச்சை குத்திக்கொள்ளாமல் இருப்பது கட்டாயத் தேவை என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கூறுகிறது.
மேற்கண்ட தகுதிகளைப் பூர்த்தி செய்யும் வேலை தேடுபவர்கள் பணியகத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளமான www.slbfe.lk/si/ வழியாக பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஜப்பானில் செவிலியர் பராமரிப்பு துறையில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட ஒரு குழு நாளை (2) ஜப்பானுக்கு புறப்பட உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
