யாழில் 3 பெண்கள் கைது...! ரிக் ரொக்கில் ஆசை காட்டி சுவிஸ் நாட்டவரிடம் பல இலட்சம் பண மோசடி

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation Switzerland
By Sathangani Sep 05, 2024 06:13 AM GMT
Report

சுவிஸ் (Swiss) நாட்டவர் ஒருவர் இளம் பெண்ணின் ரிக் ரொக் காணொளிகளைப் பார்த்து ஏமார்ந்து பல இலட்சம் ரூபாவைப் பறிகொடுத்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் (Jaffna) இடம்பெற்றுள்ளது.

குறித்த மோசடிச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் காவல்துறையினரால் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 52 வயதான ஒருவர் தற்போது சுவிஸ் நாட்டில் வசிக்கின்றார். அவர் ரிக் ரொக்கில் நேரத்தைச் செலவிடுவது வழமை.

கிளிநொச்சியில் இன்றிரவு கோரவிபத்து : ஒருவர் பலி இருவர் படுகாயம்

கிளிநொச்சியில் இன்றிரவு கோரவிபத்து : ஒருவர் பலி இருவர் படுகாயம்

47 இலட்சம் ரூபா மோசடி  

இந்த நிலையில் ரிக் ரொக்கில் உள்ள சுமார் 25 வயதுடைய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் பெயரில் அவருடைய வட்ஸ் அப் கணக்குக்கு ரிக் ரொக் காணொளிகள் அனுப்பட்டுள்ளன.

அதையடுத்து அவர்கள் இருவரும் தொடர்பாடல்களை ஆரம்பித்துள்ளனர். ரிக் ரொக் கணக்கில் பதிவேற்றப்பட்ட படங்களும் சுவிஸில் உள்ளவருக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவரும் தனது படங்களைப் பரிமாறிக்கொண்டுள்ளார்.

யாழில் 3 பெண்கள் கைது...! ரிக் ரொக்கில் ஆசை காட்டி சுவிஸ் நாட்டவரிடம் பல இலட்சம் பண மோசடி | Many Lakhs Fraud From Swiss National Using Tik Tok

இந்தத் தொடர்பாடல் இறுக்கமடைந்த பின்னர், அந்தப் பெண் பல்வேறு தேவைகளைக் கூறி சுவிஸில் உள்ளவரிடம் பணம் பெற்றிருக்கின்றார். ரிக் ரொக் கணக்கு உள்ள அதே பெயரைக்கொண்ட வங்கிக் கணக்குக்கே இந்தப் பணப் பறிமாற்றம் நடந்திருக்கின்றது.

சுவிஸில் உள்ளவரும் சுமார் 47 இலட்சம் ரூபா வரையில் கொடுத்திருக்கின்றார். அதன்பின்னர் அந்தப் பெண்ணின் தொடர்பாடல்கள் குறைய ஆரம்பித்துள்ளன.

ஒரு கட்டத்தில் சுவிஸில் உள்ளவருக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில் அவர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவு காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து மதுரைக்கு புதிய விமான சேவை: மகிழ்ச்சி தகவல்

யாழ்ப்பாணத்தில் இருந்து மதுரைக்கு புதிய விமான சேவை: மகிழ்ச்சி தகவல்

காவல்துறையினர் விசாரணை

யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவு காவல்துறை பொறுப்பதிகாரி குணறோஜன் தலைமையிலான குழுவினர் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்தனர்.

யாழில் 3 பெண்கள் கைது...! ரிக் ரொக்கில் ஆசை காட்டி சுவிஸ் நாட்டவரிடம் பல இலட்சம் பண மோசடி | Many Lakhs Fraud From Swiss National Using Tik Tok

குறித்த விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட தகவல்கள் அதிர்ச்சியளிப்பவையாக இருந்தன. விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் ரிக் ரொக்கில் உள்ள பெண்ணைக் கண்டுபிடித்து அவரிடம் விசாரணையை முன்னெடுத்தனர். விசாரணையில் அவருக்கும் இந்தச் சம்பவத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது தெரியவந்திருக்கின்றது.

அதையடுத்து வங்கிக் கணக்கு இலக்கத்தை வைத்து விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் அரியாலையைச் சேர்ந்த பெண் ஒருவரைக் கைது செய்தனர்.

அந்தப் பெண்ணின் பெயரும், முதலெழுத்தும் ரிக்ரொக் கணக்கு வைத்திருக்கும் இளம்பெண்ணின் பெயரும் முதலெழுத்தும் ஒன்றாக இருந்தன. அவரது வங்கிக் கணக்குக்கே பணம் மாற்றப்பட்டுள்ளபோதும், சுவிஸ் நாட்டில் உள்ளவருடன் தொடர்பாடலை மேற்கொண்டவர் அவர் இல்லை என்பது விசாரணைகளில் கண்டறியப்பட்டது.

ஜனாதிபதி தேர்தல் : தபால் மூல வாக்களிப்பிற்கான இரண்டாம் நாள் இன்று

ஜனாதிபதி தேர்தல் : தபால் மூல வாக்களிப்பிற்கான இரண்டாம் நாள் இன்று

மூன்று பெண்கள் கைது

தொடர் விசாரணையில் 47 வயதுடைய மற்றொரு பெண் கைது செய்யப்பட்டார். அவரே சுவிஸ் நாட்டில் உள்ளவருடன் இளம் பெண் போன்று உரையாடி பணத்தைப் பெற்றிருப்பது விசாரணைகளில் தெரியவந்தது.

யாழில் 3 பெண்கள் கைது...! ரிக் ரொக்கில் ஆசை காட்டி சுவிஸ் நாட்டவரிடம் பல இலட்சம் பண மோசடி | Many Lakhs Fraud From Swiss National Using Tik Tok

அத்துடன், இவர்களின் 'அன்ரி' என்று அடையாளப்படுத்தப்பட்ட இன்னொருவருக்கும் பணம் அனுப்பப்பட்டுள்ளது. அவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட மூன்று பெண்களும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள்.

ரிக்ரொக் பெண்ணின் பெயரும், தனது நண்பியின் பெயரும் ஒன்றாக இருப்பதைப் பயன்படுத்தி 47 வயதுப் பெண் இந்தத் திட்டத்தைத் தீட்டியுள்ளார். சுவிஸ் நாட்டில் உள்ளவர் முன்னொரு தடவை யாழ்ப்பாணம் வந்தபோது, கிடைத்த அறிமுகத்தைக் கொண்டே அந்தப் பெண் திட்டம் தீட்டிப் பணத்தை பெற்றுள்ளமையும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது, பணத்தை மீள வழங்குவதற்குச் சம்மதம் தெரிவித்துள்ளனர். அதையடுத்து அவர்களைப் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் வீடு புகுந்து வாள்வெட்டு தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் வீடு புகுந்து வாள்வெட்டு தாக்குதல்


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

அத்தியடி, கொடிகாமம், வவுனியா, Markham, Canada

19 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
மரண அறிவித்தல்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
மரண அறிவித்தல்

அராலி, உரும்பிராய், Toronto, Canada

16 May, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, மாவிட்டபுரம்

16 May, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, பாண்டியன்குளம்

21 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, வெள்ளவத்தை

19 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சூரிச், Switzerland

02 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Paris, France, London, United Kingdom

22 May, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கந்தர்மடம், La Courneuve, France

21 May, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Berlin, Germany

16 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

22 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நிலாவரை, Jaffna

22 Apr, 2025
மரண அறிவித்தல்

கம்பர்மலை, London, United Kingdom

12 May, 2025
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 2ம் வட்டாரம், Jaffna, புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

20 May, 2025
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Markham, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நுணாவில் மேற்கு

06 Jun, 2010
மரண அறிவித்தல்

சுதுமலை, யாழ்ப்பாணம், கொழும்பு, California, United States

19 May, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், வெள்ளவத்தை

11 Jun, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

20 May, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, சென்னை, India, Frankfurt, Germany, இந்தோனேசியா, Indonesia, Buenos Aires, Argentina

15 May, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025